தனது பிறந்தநாளான இன்று தூய்மை இந்தியா திட்டத்தை தொடங்கினார் கமல்ஹாசன்

Movie Gallery நb04017a6-f218-48ee-8231-432fdb059310_S_secvpfடிகர் கமலஹாசன் இன்று தனது 60வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். தனது பிறந்தநாளையொட்டி பிரதமரின் தூய்மை இந்தியா திட்டத்தையும் சென்னையில் தொடங்கி வைத்தார் கமல்.

சென்னை, ராஜகீழ்ப்பாக்கம் அருகே உள்ள மாடம்பாக்கம் ஏரியை அவர் தூய்மைப்படுத்தும் பணியை தொடங்கினார். அவரும், அவரது நற்பணி மன்றத்தை சேர்ந்தவர்களும் தமிழகத்தில் மேலும் 25 ஏரிகளை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட உள்ளதாக இப்பணியை தொடங்கி வைக்கும்போது கமல் கூறினார்.

இக்கூட்டத்தில் பா.ஜ.க மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இன்று மாலை 3 மணியளவில் கடற்கரை சாலையில், தூர்தர்ஷன் எதிரே உள்ள அண்ணா ஆடிட்டோரியத்தில் பத்திரிகையாளர்களை கமல் சந்திக்க உள்ளார்.

More Images Click here