ஒரே நேரத்தில் 5 படங்களில் நடிக்கிறார் தன்ஷிகா

Movie Gallery எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் பேராண்மை, வசந்தபாலன் இயக்கத்தில் அரவாண், பாலா இயக்கத்தில் பரதேசி இப்படி பெரிய இயக்குனர்களின் படத்தில் தொடர்ந்து நடிக்க வாய்ப்பு பெற்ற ஒரே நடிகை தன்ஷிகாதான்.

இப்போது அந்த வரிசையில் சமுத்திரக்கனி இயக்கும் கிட்ணா படத்தில் நடிக்கிறார். அமலாபாலுக்கு திருணம் ஆகிவிட்டதால் தன்ஷிகாவுக்கு இந்த அதிர்ஷ்டம் அடித்திருக்கிறது.

பெரிய இயக்குனர்கள் படத்தில் நடித்தாலும் ஹன்சிகாவுக்கு பெரிய பிரேக் கிடைக்கவில்லை. கை நிறைய படங்களும் இல்லாமல் இருந்தது. இப்போது இந்த இரண்டும் நிறைவேறியிருக்கிறது. அடுத்த மாதம் தன்ஷிகா நடித்துள்ள விழித்திரு படம் வெளிவர இருக்கிறது.

இது தவிர காத்தாடி, திறந்திடு தீசே, மால் படங்களில் நடித்து வருகிறார். கிட்ணாவையும் சேர்த்தால் தன்ஷிகா கையில் 5 படங்கள். இந்த படங்கள் தனக்கு பெரிய பிரேக் கொடுக்கும் என்றும் கிட்ணா படம் விருதுகளை வாங்கிக் கொடுக்கும் என்றும் தன்ஷிகா நம்புகிறார்.

More Images Click here