16 ஆண்டுகளுக்கு பிறகு ரொமான்ஸ் பண்ணிய பாக்யராஜ்

Movie Gallery இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரான கே.பாக்யராஜ் நடிக்கும் படங்களில் எல்லாம் அது கொஞ்சம் தூக்கலாக இருக்கும். இலை மறை காயாக, இரட்டை அர்த்த வசனங்களாக இருக்கும். முந்தானை முடிச்சு படத்தில் “நான் ஆளான தாமரை…

” ரொமான்ஸ் பாடலை இப்போதும் மறக்க முடியாது. அவரது படங்களில் ஒரு ரொமான்ஸ் பாடலாவது கட்டாயம் இருக்கும். கடைசியாக அவர் 1998ம் ஆண்டு வெளிவந்த வேட்டிய மடிச்சுக்கட்டு படத்தில் ரொமான்ஸ் பண்ணியிருந்தார்.

இப்போது 16 வருடங்களுக்கு பிறகு தான் நடித்து வரும் துணை முதல்வர் என்ற படத்தில் ஸ்வேதா மேனனுடன் ரொமான்ஸ் பாடலில் நடித்திருக்கிறார். இதற்காக அண்மையில் இருவரும் நெருக்கமாக ஆடிப்பாடும் பாடல் காட்சிகளில் நடித்தனர்.

இந்தப் படத்தில் பாக்யராஜுடன் ஜெயராம் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக காதல் சந்தியா நடிக்கிறார். கவுதம், கோஸ்ரீ என்ற புதுமுகங்கள் நடிக்கிறார்கள். பிரதீப் இசை அமைக்கிறார். கார்த்திக்ராஜா ஒளிப்பதிவு செய்கிறார் கே.பாக்யராஜின் கதை, திரைக்கதையை ஆர்.விவேகானந்த் இயக்குகிறர்.

இது அரசியல் காமெடி படம். பெரும்பகுதி படப்பிடிப்பு முடிந்து விட்டது. டிசம்பரில் வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள்.

More Images Click here